Sunday, November 25, 2007

அவுஸ்திரேலிய தேர்தலும் நம் தேர்தலுக்கும் இடையிலான வித்தியாசம்

நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம்.

ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன்.அவ்வளவு அமைதியாக நேர்மையாக நடந்தது தேர்தல்

சுவருக்கு சுவர் எந்த போஸ்டரையும் காண முடியவில்லை சந்திகளில் எந்த கட்டவுட்டையும் சத்தியமாக நான் காணவில்லை.அரசாங்க வாகனங்களை ஆழும் கட்சி தவறுதலாக பயன்படுத்துவதையும் நான் காணவில்லை.அரசியல்வாதிகள் தமது அலுவலகங்கள் வீடுகளில் காட்டவுட்டுகள் போஸ்டர்களை ஒட்டி இருந்தார்கள் மற்றும் வேட்பாலர்களே தெருவீல் நின்று தமக்க்கு பிரச்சாரம் செய்தார்கள் அதுவும் துண்டு பிரசுரங்களை கொடுத்து மிகவும் அமைதியாக பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல்.

மைக் செட் போட்டு காது கிழிய கத்தவில்லை.அல்லது தொண்டர் படைகளை புரியாணி பொட்டலம் கொடுத்தோ சாராயம் கொடுத்தோ தூர தேசங்களில் இருந்து லாறிகள் பஸ்களில் ஆடுமாடுகளை போல ஏற்றி வந்து ஊரெல்லாம் பிரச்சாரகூட்டம் செய்ய வில்லை.தலைவர்கள் பாதுகாப்பு என பில்டப் கொடுத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தவில்லை முக்கியமாக அரசியல் கொலைகளோ அரசியல் வன்முறைகளோ நிகழவில்லை தீக்குளிப்பு மண்சோறு சாப்பிடுதல் போன்றவற்றை எந்த தொண்டரும் செய்யவில்லை

இலங்கையில் தேர்தல் என்றால் அதாவது சிங்கள தேசத்தில் வேட்பாளாரின் வீட்டில் தேர்தலுக்கு 1 மாதம் முதலே அன்னதானம் தொடங்கி விடும் அடுத்தவரை திட்டி போஸ்டர் அடிக்கப்பட்டு ஊர் சுவரெல்லாம் நாறடிக்கப்பட்டுவிடும்.எப்படியும் ஒரூ 100 அரசியல் வன்முறையும் கடைசி 10 அரசியல் கொலையாவது நடந்துவிடும்.ஆனால் இவை ஒன்றையும் நான் காணவில்லை ஏன் கேட்கவில்லை

தேர்தல் நாளுக்கு வருவோம்.வாக்களிக்கும்ம் உரிமையுள்ள அத்தனை வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் அப்படி வாக்களிக்காவிடின் அபராதம் விதிக்கப்படும் இது அவுஸ்திரேலிய தேர்தல் சட்டம்.அதேபோல எனது வீட்டுக்கு அருகில் அதாவது 50 மீற்றர் தொலைவில் வாக்கு சாவடி இருந்தது அங்கு எந்தவிதா பாதுகாப்பையும் காணவில்லை பொலிஸாரை கண்ணால் கூட காணவில்லை.போட்டியிட்ட இரூ கட்சியினர் வாசலில் நின்று நட்பு பாராட்டி பேசியபடி தமது இறுதிகட்ட பிரச்சாரத்தை மிக மிக அமைதியாக நடத்தி கொண்டிருந்தனர் எந்தவித கள்ள வாக்கும் பதிவாகவில்லை வாக்கு சாவடி ஒன்றும் சூறையாடப்படவும் இல்லை வாக்கு பெட்டிகள் கடத்தபடவும் இல்லை இவை அனைத்தும் பிரமிப்பாக இருந்தது என்னடா நம்ம நாடுகளில் தேர்தல் என்றால் எதிர்கட்சிகாரனை உதைக்க வேண்டும் கள்ளவாக்கு ஒன்றையாவது ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் இடவேண்டும் வாக்குசாவடி சூறையாடபட வேண்டும் இவைதானே நம்மூரில் தேர்தலின் நடைமுறை இவை ஒன்றையும் காண முடியாவிட்டால் பிரமிப்பாகத்தானே இருக்கும்


அதை விடுங்கள் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் வருவோம்.வெற்றி பெற்றதாக நம்மூரில் அறிவித்தால் என்ன நடக்கும் பட்டாசு வெடிக்கப்படும் இந்த தேர்தல் நீதியற்றது அது அற்றது என தோல்வியற்றவர் அறிக்கைவிடுவார் ஸ்ரண்ட் அடிப்பார் இதுதானே வழமை ஆனால் தொல்வி அடைந்த பிரதமர் ஹவார்ட் எனக்கு மக்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கொடுத்த மக்களுக்கு நன்றிகள் வெற்றிபெற்ற கெவின் ரூட்டுக்கு பாராட்டுகள் என தெரிவித்தார் இதை பார்க்கையில் நமது நாடுகள் அதாவது இலங்கை இந்திய அரசியல் எந்த சாக்கடைகுள் இருகின்ரது என புலப்படுகின்றது இதற்கு விடிவு காலமே இல்லையா???

1 comment:

வந்தியத்தேவன் said...

ஐயா நம்ம நாடுகளில் தேர்தல் என்றால் வன்முறை, கட்அவுட், வெடிகுண்டு இவை எல்லாம் தேவை. இவை இல்லாத தேர்தல் தேர்தலா? அவுஸ்திரேலியாவில் இவற்றை ஒரு தரம் செய்துகாட்டவும்.