Saturday, October 27, 2007

நன்றி இந்தியா தொடர்க ஈழத்தமிழருக்கு உன் சேவைகளை

எதிரியாக இருக்கும் இந்தியாவும் பாக்கிஸ்தானும் தமது நாட்டு பாதுகாப்புக்கு உருவாக்கும் ஆயுதங்கள் அதாவது எதிரி நாடுகளின் ஆயுதங்கள் நட்பு பாராட்டி செயற்படுவது தமிழனை கொல்லத்தான் என்பது உண்மை.இரு துருவங்களாக இருக்கும் நாடுகள் ஒற்றுமையாக செய்யும் ஒரே செயல் ஈழத்தமிழனை கொல்ல ஆயுதம் வழங்குவதே.இந்திய மல்ரிபரலும் பாக்கிஸ்தான் மல்ரிபரலும் அருகருகே இருந்து தமிழின கொலைகளை செய்வது வேடிக்கை அதிசயம்.

மல்ரி பரல் என்றால் என்ன

12 ராக்கடுகளை 40 செக்கணில் செலுத்த கூடிய ஒரு பேரழிவு ஆயுதம் 3.9 சதுர கிலோமீற்றரை துவம்சம் செய்ய கூடியது

இலங்கை அரசு பயண்படுத்தும் இந்திய பல்குழல் உந்துகணை செலுத்தி
Sri Lankan army use Multi Barrel Rocket Launcher.
multiple rocket launcher developed by the DRDO for the Indian
Army. Development began in 1983. The system has a maximum more...
range of 39-40 km, fire a salvo of 12 HE rockets in under 40
seconds, with a beaten zone of 3.9 square kilometres. The
system is mounted on a Tatra truck for mobility. The entire
system consists of a launch vehicle, loader/refill vehicle,
and a command vehicle with a battery of six launchers.

இன்று 21 வேங்கைகளின் உயிர் கொடையால் தாக்கி அழிக்கப்பட்ட விமானப்படையின் இழபீட்டினை கட்டியெழுப்ப இந்தியா உதவ போகின்றதாம் நல்லது ஆயுத்ஹம் கொடுக்க டெல்லியில் கொடைவள்ளல்கள் இருகின்றனர் ஈழத்தில் கொல்லப்பட நாம் இருகின்றோம் அல்லவா கோடான கோடி நன்றிகள் இந்த உதவியை நாம் என்றும் மறவோம்

இந்தியா இலங்கைக்கு போட்ட பிச்சையால் இந்தியா எமக்களித்த பரிசின் படங்கள் சில உங்களுக்காக


7 கோடி சகோதர சகோதரிகள் இந்தியாவில் இருந்தும் நான் அநாதைகளாகத்தான் இருகின்றோம் எதையும் கட்டுப்படுத்தும் அரசியல் பலம் தமிழர்களிடம் இருந்தும் எம்மை கொல்ல ஆயுதம் வழங்கப்படுத்தான் கொண்டிருகிறார்கள் ஏன் நாம் என்ன பலியிடப்படும் ஆடுகளா?எமகேன மானத்தோட வாழ சிந்தித்தது தப்பா?குட்ட குட்ட குனிய வேண்டும் என்பது போல இருகாது திரும்ப ஓங்கி குத்துவதுதான் தவறா?

ஏன் உதவாவிட்டாலும் உபத்திரம் செய்கிறார்கள் இந்திய ஆளும் வர்கத்தினர்?????

உலகமயமாக்கல் என்கின்றீர்கள் ஆனால் நீங்கள் கொடுத்த ஆயுதத்தால் 300கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டார்களே அதாவது சொந்த மக்கள் இறந்தாலும் பரவாயில்லை வருமாணம்தான் முக்கியம் அப்படித்தானே ??? ஆடு நனையுது என ஓநாய் அழுகிறது என நீங்கள் நினைக்க கூடும் ஆனால் ஒவ்வொரு தமிழனின் அநியாயசாவினையும் தட்டி கேட்கும் உரிமை எனக்கு இருக்குது சகோதரன் என்ற ரீதியில் வாய்வீச்சுக்கு சகோதரன் எனவில்லை அடிமனதில் இருந்தே சொல்கின்றேன்


உலகமயமாக்கல் வர்த்தகம் என நீங்கள் சொல்வீர்களாயிருப்பின் தமிழர் தரப்பு உங்களிடம் ஆயுதம் வாங்க தயாராக இருகின்றது எந்த கடனும் இல்லாமல் எத்தினை கோடி என்றாலும் தயார் விற்க நீங்கள் தயாரா??மீண்டும் நன்றி இந்தியா இன்னும் கொல்ல ஆயுதங்களை வழங்குங்கள் !!!!!!!

அநுராதபுர அதிர்வு - அவசிய அறிக்கை - 10

ஒப்பரேசன் எல்லாளன் படை நடவடிக்கையில் களப்பலியான கரும்புலிகளை நினைவு கூர்ந்து ஓர் பாடல்

Thursday, October 25, 2007

இதிலை இருப்பவையில் அநேகமானதை காணவில்லையாம் கண்டனியளோநீங்கள் கண்டிருப்பின் இலங்கையில் இருப்பின் 116 வெளிநாட்டில் இருப்பின் 0094116 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தெரிவியுங்கள்

நாம் மூச்சாக எழுந்து நின்றால் தமிழீழம் விரைவில் வரும்: அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள்

09.10.2007

என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும்.

எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு.

வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

இ.இளங்கோ.

Monday, October 22, 2007

மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் இந்த ஓட்டைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கும் சிங்கங்கள்
களமாடி விடுதலை கனவுடன் மீளாத்துயிலில் இருக்கும் வீர வீராங்கனைகளே!
களமாடி மரணித்த வீர வேங்கைகளுக்கு நன்றியுடன் கலந்த வீர வணக்கங்கள் உங்களை என்றும் மறவோம் என்றும் தலமையின் கீழ் அணிவகுத்து தலமையின் கரங்களை பலப்படுத்துவோம்.
சில சந்தர்பவாதிகளுக்கு!
இவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்யபோகின்றோம் இவர்கள் எமக்காக உலகிலேயே பெரிய தானமாகிய உயிர்தானத்தை செய்துள்ளார்கள் என்றைக்கும் எமது தலமைமீதும் எமது இயக்கத்தின் மீதும் நம்பிக்கைவைத்து சோர்வடையும் செய்திகள் என கூலாக உல்லாசமாக இருந்து என்னப்பா இயக்கம் கிழக்கில வீக்காம் கிழக்கு போச்சு இனி வன்னியுமா என கேட்பதை விடுத்து[என்னிடம் சொன்னவர்கள் இருகின்றார்கள்] ஒவ்வொரு வீரனும் எமக்காக செய்யும் தியாகங்களை கொச்சை படுத்தாமல் என்றும் தலமையின் பின் அணிசேர்வோம் எம்மாலான அனைத்துவிதமான உதவிகளையும் தயக்கமின்றி செய்ய முன்வாருங்கள்.தமிழரின் ஒவ்வொரு அங்குல வெற்றியும் ஒவ்வொரு உயிர்கொடையாலேயே உருவாகின்றது

Sunday, October 21, 2007

இந்திய கோரமுகத்தின் 20 ஆண்டு நிறைவு நாள்
எந்தவிதமான பயங்கரவாதியும் மதிப்பளிக்கும் இடம் வைத்தியசாலை ஆனால் 21/10/2007 அன்று அகிம்சை தேசத்தின் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் அட்டூழியம் செய்த படைகளால் வைத்தியர் தாதியர் நோயாளர் பெண்கள் குழந்தைகள் வயோதிபர் என எந்த பாகுபாடு காட்டாமல் சன்னங்களால் துளைத்து பலியெடுத்த 20 ஆண்டு நாள் இன்று அன்று ராஜீவ் காந்தியின் பயங்கரவாதத்தால் தம் உயிரை துறந்த எம் உறவுகளுக்கு 20வது ஆண்டு நினைவஞ்சலிகளை மிக்க வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன்

Incomplete list of the media coverage on the incident


:http://www.tamilnation.org/indictment/indict047.htm
http://www.sangam.org/articles/view/?id=360
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13203
http://www.ltteps.org/?view=1736&folder=25

Thursday, October 18, 2007

சிங்கபூர் சிற்பி லீகுவான்யூ அவர்களின் இலங்கை பற்றிய கருத்துபடத்தின் மேல் கிளிக் செய்து பெருதாக்கி பாருங்கள்

Sunday, October 14, 2007

ஒவ்வொரு தமிழனும் பார்க வேண்டிய காணொளிஇந்த காட்டெருமைகளுக்கு இருக்கும் ஒற்றுமை எம்மிடம் ஏன் இல்லாமல் போனது???????

Friday, October 12, 2007

மகிந்தவின் இந்தியப் பயணம்: தமிழக உறவுகளுக்கு யாழ். பொதுமக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

மகிந்தவின் இந்தியப் பயணம் தொடர்பில் தமிழக உறவுகளுக்கு யாழ். பொதுமக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


யாழ். பொதுமக்களின் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

எமது தேசத்தில் தமிழ் மக்கள் மீதான மனிதவதை இப்போது உச்சத்தாண்டவம் ஆடுகின்றது. காலங்காலமாகத் தமிழின அழிப்பையே கையிலெடுத்து அரியாசனமேறி, ஆட்சி நடத்தும் சிங்கள இனவெறித் தலைவர்களின் வழிவந்த மகிந்த ராஜபக்ச, தனது இனத்தின் 85 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களின் ஆசீர்வாதத்தோடு உச்சக்கட்ட மனித வதையை எம்மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் எம்மவர்கள் காணாமற் போகடிக்கப்படுகிறார்கள், கோவில்களிலும், வீடுகளிலும், வீதிகளிலும் சுட்டுக்கொல்லப்பட்டு அநாதைப் பிணங்களாகக் கிடக்கின்றார்கள். பாதுகாப்புத் தேடி வேறு வழியற்று சிறைச்சாலைகளில் தஞ்சம் புகுகின்றார்கள்.

எமது பெண்கள் சிங்களப் படைச் சிப்பாய்களின் காமவெறிக்கு இரையாக்கப்படுகின்றார்கள்.

இன்று யாழ்ப்பாணக் குடாநாடு சிறிலங்காவின் ஒரு சிறைச்சாலை. உலகத்தில் மனித வதைகளுக்குப் புகழ்பெற்ற பல்வேறு சிறைச்சாலைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவற்றிற்கு எந்த வகையிலும் குறைந்துவிடாத அல்லது அதற்கும் மேலான வதைகள் நடக்கும் சிறைச்சாலையொன்றில் நாங்கள் வாழ்கின்றோம்.

எங்களைச் சுற்றிலும் 40,000-க்கும் மேற்பட்ட இனவெறிச் சிப்பாய்கள் நவீன ஆயுதங்கள் தாங்கி நிற்கின்றன.

வீதிகள் தோறும், ஊர்கள் தோறும் நெருக்கமான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்மைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பதற்கு மனிதத் தன்மையற்ற பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எம்மை பல்வேறு வழிகளாலும் அழித்தொழிப்பதையே அவர்கள் தினந்தோறும் செய்து வருகின்றார்கள்.

கடந்த இரு மாதத்தில் வெளித்தெரிய வந்த தகவல்களின்படி மட்டும் எம்மில் 59 பேர் கொல்லப்பட்டார்கள். 37-க்கும் மேற்பட்டோர் கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போகடிக்கச் செய்யப்பட்டு விட்டார்கள். உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதால் தினந்தேறும் குடும்பமாகவும் தனித்தனியாகவும் சிறைச்சாலைகளில் தஞ்சமடைவோர் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அங்கும் அவர்கள் சிறிலங்கா அதிகாரிகளாலும், காவல்துறையினராலும் மோசமாக வதைக்கப்படுகிறார்கள்.

எமது வதையின் கதை இப்படியிருக்க கிழக்கு மாகாணத்திலே எமது உறவுகளின் நிலையோ வார்த்தைகளுக்குள் உட்படுத்த முடியாது கோரமாக உள்ளது.

அங்கு அவர்களது சமூகக் கட்டுமானங்கள் யாவும் உடைக்கப்பட்டு எந்தவிதமான தகவல்களும் வெளிவராதவாறு செய்யப்பட்ட நிலையில் இனவெறியாட்டம் நடக்கிறது. தமிழ் மக்களின் உயிர்கள் வகை தொகையின்றி உறிஞ்சப்படுகின்றன. வீடுகள் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் காணிகள் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்படுகின்றன. வதையுறும் அம் மக்களின் அவலக்குரல் எவருக்கும் கேட்கவே இல்லை.

சர்வதேசத்தின் கவனம் குவிந்துள்ள சிறிலங்காவின் தலைநகரில் கூட தமிழர்கள் அப்பட்டமாகக் கொல்லப்படுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் கூட இதற்கு விதிவிலக்காகவில்லை. இதனைவிட அங்கும் தமிழர்கள் காணாமற் போகடிக்கப்படுகிறார்கள், அவர்களது பணம் வருத்திப் பறிக்கப்படுகிறது. அண்மையில் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழ்மக்கள் பலவந்தமாக ஒரு இரவில் வெளியேற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அதிலிருந்து எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றத்துடன் அவர்கள் வாழ்வும் நகர்கிறது.

எம்மீது இத்தனை கொடூரங்களையும் கட்டவிழ்த்து விட்டிருக்கும் சிறிலங்காத் தலைவர் ஆறு கோடி தமிழர்கள் வாழும் மண்ணில் மீண்டும் ஒருமுறை காலடி எடுத்து வைக்க இருக்கிறார். எம்மை அழிப்பதற்கான கருத்தியல் ஆதரவோ, பொருளாதார ஆதரவோ, படைக்கல உதவிகளோ தேவைப்படும் போதெல்லாம் அவர் ஓடோடி வரும் முதல் நாடாக இந்தியா இருப்பது தான் எம்மை மீளாத வேதனையுள் ஆழ்த்தியுள்ளது.

இத்தனை காலமும் எம்மீதான அழிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து சிறிலங்காவிற்கு உதவி வந்தன. ஆனால், தற்போது மகிந்த அரசின் மனித வெறியாட்டக் கோரங்கள் அப்பட்டமாக வெளிவந்த நிலையில் அந்நாடுகள் சங்கடத்திற்கு உள்ளாகி நிற்கின்றன. சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் என சர்வதேச சமூகமே ஒன்றிணைந்து சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நிற்கின்றன. அதனால் வெளிப்படையான படைத்துறை உதவிகளைக் கூட பலவேறு நாடுகள் நிறுத்தியுள்ளன. அமெரிக்கா நாடு கூட சிறிலங்காவிற்குப் படைத்துறை உதவிகளை நிறுத்தவுள்ளதான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட சர்வதேச மட்டத்திலான பயணங்களை மேற்கொண்டு தனது கொடூரமுகத்தை மூடிமறைக்கப்படாத பாடுபட்ட மகிந்த அவற்றில் பாரிய தோல்வியையே சந்த்தித்தார்.

சர்வதேச அளவில் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சிங்களத்தலைவர் தனது தமிழின அழிப்பிற்கு உதவி கோரி இப்போது உங்களது தேசத்திற்கு வந்திருக்கிறார். எப்போதும் போல இந்தியாவை ஏமாற்றித் தனக்கான உதவிகளைப் பெற்றுவிடலாம் என்ற அசையாத நம்பிக்கை அவருக்கு உண்டு.

"எங்களுக்கு உலகில் எவருமில்லை. தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் ஆறுகோடி தமிழர்கள் இருக்கிறார்கள்" என்று எப்போதும் சிங்களவர்கள் கூறிக்கொள்வார்கள். நாமும் இங்கு துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்கும் போதெல்லாம் எங்களுக்கு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையிலேயே மனதைத் தேற்றிக்கொள்வோம்.

என்றோ ஒரு நாள் எங்களுக்காகப் பொங்கியெழுந்து வந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எஞ்சிய உயிரைப் பிடித்தபடி இன்றுவரை வாழ்ந்து வருகின்றோம். ஆனால், அப்பட்டமான மனித வதைகளுக்காக அமெரிக்காவின் முகத்தில் முழிப்பதற்கே திண்டாடும் சிங்களத் தலைவர் கோடிக்கணக்கான தமிழ்மக்கள் வாழும் இந்திய மண்ணிற்குத் தேவைப்படும் போதெல்லாம் வந்து ஆதரவுபெற்று வருவது எம்மைத் துயரத்தின் உச்சிக்கே இட்டுச் சென்றுள்ளது.

நாம் எமது உயிரினும் மேலாக நேசிக்கும் எமது உறவுகளே! தமிழர்கள் என்பதற்காக எங்கள் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள், குழந்தைகள் பட்டினி போடப்படுகிறார்கள், இளைஞர்கள் அப்பட்டமாகக் கொல்லப்படுகிறார்கள். அல்லது அதற்காக எங்கோ கடத்திச் செல்லப்படுகிறார்கள். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலங்களிலிருந்து எதுவுமற்ற ஏதிலிகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். இவ்வாறு எமது இனமே அழித்தொழிக்கப்படும் நிலையிலுள்ளது. எமது அழிவிற்கான ஆதரவும் உதவிகளும் நீங்கள் வாழும் பாரத தேசத்திலிருந்து எமது கொலையாளிகளின் கைகளுக்குக் கிட்டுவதை நாம் ஆத்மார்த்தமாக விரும்பவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.eelampage.com/index.php?cn=33788