Thursday, August 30, 2007

சாவின் விளிம்பு

சாவின் விளிம்பிற்கு நான் சென்று வந்த அனுபவம் பல இருகின்றது நான் 4 வயதிருக்கும் போது அப்பாவுடன் சைக்கிளில் செம்மணியால் ஒரு இரவு 8 மணியளவில் வந்து கொண்டிருக்கும் போது இந்திய இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று எம்மை துரத்தி துரத்தி சுடத்தொடங்கியது அப்பாவோ தனக்கிருந்த எல்லா சக்தியையும் திரட்டி சைக்கிளை மிதித்து கடைசியில் செம்மணி சுடலையில்[மயானம்] இருக்கும் கொங்கிரீட் கட்டிடத்தில் கவர் எடுத்தோம் ஆனால் கட்டடத்துக்கும் மேல் எல்லாம் ரவைகள் விழ அங்கிருந்து தப்பி உடல்கள் எரிக்கும் இடத்தில் படுத்திருந்தோம் இது எனது முதலாவது அனுபவம் அதேபோல‌ இந்த சம்பவம் நடந்து ஒரு 3 மாதத்தில் எமது ஊரில் இருந்த வீட்டில் இந்தியன் ஆமியின் பிரச்சினை காரணமாக எமது அம்மாவின் தங்கையின் குடும்பம் அப்பாவின் சகோதரர்கள் என ஒரு 5 குடும்பம் வரையில் தங்கி இருந்தோம் ஒரு நாள் புலிகள் வைத்த கண்ணிவெடியில் கடுப்பான இந்தியன் ஆமி வீட்டை சுற்றிவளைத்து எம் அனைவரையும் வெளியே வரச்சொல்லி வீட்டு முற்றத்தில் லைனில நிக்க வச்சு சுடுவதற்கு ஆயத்தமாகினர் அந்த நேரத்தில் நாய் ஒன்று அவங்களை பார்த்து குரைக்க ஏற்க‌னவே கடுப்பில் இருந்த இந்தியன் ஆமி நாயை துரத்தி துரத்தி வெடி வைக்கும் போது அந்த சத்தத்தில் எமது ஊரின் இந்தியன் ஆமியின் கமாண்டராக இருந்த மல்கோத்திரா என்னும் இந்திய இராணுவ அதிகாரி அவ்விடத்துக்கு வர அவனே மற்றைய இராணுவத்தினரை சமாதானப்படுத்தி எம் அனைவரையும் காப்பாற்றினான் இல்லாவிட்டால் வல்வெட்டிதுறை படுகொலையை எப்படி நினைவு கூறுகின்றோமோ அப்படி கைதடி படுகொலை என ஒன்றை நினைவுகூர்ந்திருக்கும் தேவை இருந்திருக்கும்

அதன் பின்னர் நான் நினைகின்றேன் 93 அல்லது 94 என‌ மாமாவின் திருமணத்துகாக இந்தியா செல்வதற்கு கிளாளியை நோக்கிய பயணம் தொடங்கியது இருபாலைக்கும் கல்வியங்காட்டுக்கும் இடையில் அதாவது வரதர் மாஸ்டரின் ரியூட்டரிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு முன் என் கால்களை சைக்கிள் சில்லுக்குள் கொடுத்து விட்டேன்.இருபாலையில் இருக்கும் அப்பாவின் நண்பர் ஒருவரின் வைத்திய நிலையத்துக்கு சென்று மருந்து கட்டிவிட்டு கிளாளி நோக்கி பயணமானோம் அங்கு ஒருவாறு படகுக்கு டிக்கட் எடுத்துவிட்டு கடற்கரையை நோக்கி நகர்ந்த போது இரவில் என்னால் நடக்கமுடியாது பயமாக இருகின்றது என அழுது ஆர்பாட்டம் பண்ணினேன் இன்று போகாமல் நாளைக்கு பயணமாகுவோம் என்பதை கேட்ட அப்பா சரி என சொல்லி வீட்டினை நோக்கி பயணமானோம் அடுத்த நாள் பத்திரிகையில் கிளாளி படகினை வழிமறித்த சிங்கள படைகள் சரமாரியாக வெட்டி 40 தமிழர்களை கொன்றனர் என்னும் செய்தி படித்தோம் இதனை சாவின் விளிம்பு என சொல்லமுடியாவிட்டாலும் என்னை பொறுத்தவரையில் அவ்வாறான நிகழ்வே.

அது போக போனவருடம் 2005ம் ஆண்டு டிச‌ம்பர் 26ம் திகதி சரியாக சுனாமி வந்து 1 வருடம் அன்று நாம் நண்பர்களுடன் அவுஸ்திரேலியாவில் கடற்கரை ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்தோம் அது பெரிய பயங்கர அலைகளை கொன்ட கடல் நாம் 4 பேர் கடலில் விளையாடி கொண்டிருந்தோம் அப்படியே மெதுமெதுவாக முன்னேறி அலைகள் உருவாகுவதற்கும் இடம் அதாவது முதல் ஒருதிட்டாக எழுந்து வருமல்லவா அதில் நானும் இன்னொரு நாண்பரும் சென்று எமது உயரத்தில் நாம் இருவருமே 6 அடி 2 அங்குலம் உயரமானவர்கள் எம்மை விட உயரமான இடத்தில் அலைகளுக்குள் மாட்டாமல் துள்ளி துள்ளி விளையாடி கொன்டிருந்தோம் எனது இரு நண்பர்கள் கடற்கரையிலும் மற்றையவர்கள் வேறிடத்திலும் இருந்தார்கள்.திடீரென‌ கரையை திரும்பி பார்த்தது கரையில் இருந்து ஒரு 100 தொடக்கம் 150 மீற்றர் தொலைவில் நாம் நின்று கொண்டிருந்தோம் கரை எமக்கு தெரியவில்லை ஏன் எனின் இராட்சத அலைகள் எம்மை கரையில் இருந்தவர்களை மறைத்து கொண்டிருந்தது எனக்கு நீச்சல் வரும் என்றாலும் நீந்த முடியவில்லை காலை நிலத்தில் வைக்கலாம் என பார்த்தாலும் முடியவில்லை எனக்கு மூச்சு எடுப்பதற்கும் கஸ்டமாக இருந்தது பதட்டத்தில் நாம் உதவி உதவி என கத்தும் போது பக்கத்தில் நின்ற வெள்ளைகள் தாம் பிழைத்தால் காணும் என கரைக்கு போய் விட்டார்கள் கரையில் நின்ற நண்பர்கள் இருவரும் எம் நிலையை அறிந்தவுடன் ஒருவர் கடலை விட்டு வெளியே ஓடிவிட்டார் மற்றவர் தன் உயிரை பணயம் வைத்து எம்மை காப்பாற்ற மெதுமெதுவாக முன்வந்தார் அவரின் கையினை என் கை தொடும்போது வந்த இராட்சத அலை அவரை எமக்கு முன்னால் இருக்கும் நீரோட்டத்துகுள் இழுத்து சென்றுவிட்டது எனக்கென்றால் ஒரே விசர் என்னை காப்பாற்ற வந்தவரை என்னால் ஆபத்தில் சிக்கிக்கொண்டாரே என அப்போது லைப் காட்ஸினை என்னுடன் இருக்கும் நண்பர் கண்டு விட்டார்

எம்மை நோக்கி வேகமாக சர்வ சாதாரணமாக நீந்தி வந்த அந்த உயிர்காக்கும் தொண்டரை நாம் எப்படியும் கரையை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எம்மை காப்பாற்ற வந்து ஆபத்தில் சிக்கி கொண்ட மற்றைய நண்பரை நோக்கி செல்லும் படி சைகை காட்டினோம் பக்கத்தில் இருந்த நண்பரோ ஒருவாறு கரையை நீந்தி அடைந்து விட்டார்.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஒருவாறு கண்ணை மூடியபடி நீந்த தொடங்கினேன் ஒருவாறு அலைகள் உருவாகும் நீரோட்டத்தை அடைந்துவிட்டேன் அங்கிருந்து அலைகளோடு அலைகளாக கரையில் சுருட்டி வீசப்பட்டேன்.கரையில் நின்ற 3 நண்பர்களும் என்னை தூக்க வந்த போது அவர்களை உதறி விட்டு மற்றைய நண்பரை நினைத்து அவரின் நிலையை எண்ணி ஒரு குழப்பாமான நிலையில் விசரன் போல கடற்கரையை அதாவது கடலில் இருந்து எதிர்திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் அதன் காரணம் நான் தத்தளித்து கொண்டிருக்கும் போது அவர் எழுப்பிய அவலகுரல்தான் "இதோட நான் சரி" என்பது அதற்கு பிறகு அவரின் குரலை நான் கேட்கவில்லை அப்போது திடீரென ஜயாம் ஓகே சேவ் மை பிரன்ட்ஸ் என ஒரு குரல் கத்துவது கேட்டது திரும்பி பார்த்தால் கடலில் சிக்கிய நண்பரின் தலைமுடியை பிடித்து உயிர்காக்கும் தொண்டர் அவரது சேர்பிங் படகில் ஏற்றினார் அவரோ சேவ் மை பிரன்ட்ஸ் என அந்த லைப் காட்டினை கெஞ்ச லைப் காட்ஸ் அவரின் தலை முடியை பிடித்து திருப்பி எம்மிருவரையும் காட்டவே அவர் அமைதி அடைந்தார்.பின் ஒருவாறு கரையை அடைதார் அதன் பின்னரே நானும் வழமைக்கு வந்தேன் இல்லை வர முயற்சி செய்தேன் கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு 250 மீற்றர் தூரத்தில் எமது நண்பர்கள் கொஞ்ச பேர் இருந்தார்கள் அவர்களிடம் நாம் களைத்து விழுந்து போய் எமது சோககதை சொன்னபோது நம்ப மறுத்தபோது வந்த விசர் இருக்கே அதைபோல விசர் ஒருநாளும் வந்ததில்லை

அந்த சம்பவம் என் உண்மையான நண்பர் ஒருவரை எனக்கு இனம் காட்டியது என் நிலையை கண்டு தன் உயிரையும் பொருட்படுத்தாது என்னை காக்க வந்த அந்த நண்பரை வாழ்நாளில் எந்த சமயத்திலும் மறக்கமாட்டேன் .அன்றுகரையில் இருந்தே யோசித்தோம் நாம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கஸ்டபட்டிருபார்கள் என அதுமட்டுமா எமக்காக உயிரை துச்சமென மதித்து எமது விடுதலைகாக போராடும் போராளிகளின் உழைப்பு கண்முன்னால் திரும்ப திரும்ப ஓடியது அங்கயற்கன்னி அக்கா அவர்கள் 35 மைல் நீந்தி தன்னை ஆகுதி ஆக்கும் போதும் எப்படி கஸ்டப்பட்டு உழைத்திருப்பார் எனவும் புரிந்தது நாம் எமது உயிரை காப்பாற்ற கஸ்டப்பட்டோம் ஆனால் அங்கற்கன்னி அக்காவோ 35 மைல்கள் கஸ்டப்பட்டு நீந்தி தன்னை வெடிக்க வைத்து கப்பலையும் தகர்த்து வெற்றி கண்டார்.இவர்களின் சாதனைகளுக்கும் அவர்கள் படும் கஸ்டங்களுக்கும் முன் நாம் அன்று ஒரு 20 நிமிடம் அனுபவித்த‌ கஸ்டம் ஒரு தூசுக்கு சமன்

No comments: