Tuesday, November 13, 2007

தமிழக உறவுகளுக்கு சகோதரன் வரையும் மடல்

வணக்கம் தமிழக உறவுகளே

உங்கள் எழுச்சியும் உணர்சி வசப்பட்ட உரைகளும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உற்சாகத்தை உண்டாக்குகின்றது.தமிழக தமிழீழ உறவு பலமானது சகோதரபாசமுடையது என்பதனை நிருபிக்கின்றது. அதே வேளை சில அரசியல் சக்திகளின் செயற்பாடுகள் வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல உள்ளது.



தமிழீழ விடுதலைபுலிகள்தான் தமிழீழ தமிழரின் தேசிய இராணுவம் தமிழீழ விடுதலை புலிகள்தான் தமிழீழ மக்களின் அரசியல் பலம் என்பது மறுக்க முடியாத வெளிப்படை உண்மை.இதனை தமிழீழ மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்த்தலை புறக்கணித்ததிலும் சரி கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் சரி நிருபித்து விட்டனர்.

தமிழீழம் என்பது ஒரு இயக்கத்தின் நிலைபாடு அல்ல அது ஈழமக்களின் வாழ்வியல் போராட்டத்தின் முடிவு நாம் 1948ம் ஆண்டு முதல் தாக்கப்பட்டும் கொடுமைப்பட்டும் வந்துள்ளோம் என்பது தாங்கள் அறிந்ததே.1956,1976,1983 ஆகிய வருடங்களில் வகைதொகை இன்றி எம்மக்கள் கொல்லப்பட்டதும் சொத்துகள் அழிக்கப்பட்டதும் நீங்கள் அறியாதது அல்ல அதன் பிறகே தமிழீழ விடுதலைபோராட்டம் பல்வேறு இயக்கங்களால் முன்னெட்டுக்கப்பட்டது ஆனால் இலட்சியம் இல்லாத கொள்கை இல்லாத தலைவர்களால் பல்வேறு இயக்கங்கள் சிதைக்கப்பட்டும் வந்ததும் தாங்கள் அறிந்ததே ஆனால் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களினால் அன்று தொடக்கம் இன்றுவரை இலட்சியத்தின் மேல் பற்றுகொண்டே இயங்கி வருகிறது தமிழீழ தேசிய இயக்கமாகிய தமிழீழ விடுதலை இயக்கம்

புலி எதிர்ப்பு ஈழ ஆதரவு என்னும் கோசம் என்றுமே எடுபடாது இதுவானது பால் பிடிக்கும் பால் வழங்கும் பசுமாடு பிடிக்காது என்பது போல உள்ளது.ஒட்டு மொத்த ஈழத்தமிழினதின் ஏக இராணுவம் அரசியல் சக்தி பாதுகாவலர்கள் எல்லாம் தமிழீழ விடுதலை புலிகள் மட்டுமே எமது தலைவர் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் மட்டுமே இதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை எமது தேசிய இயக்கமும் எமது தலைவரும் இல்லாத எந்த ஒரு தீர்வினையும் ஈழமக்கள் எதிர்பார்கமாட்டார்கள் எதிர்பார்க்கவும் இல்லை.இன்றுவரை எமக்காக தமது இன்னுயிர்களை அர்பணிப்பது தமிழீழ விடுதலைபுலிகள் மட்டுமே

இந்தியா தமிழீழ போராட்டத்துக்கு பல்வேறு உதவிகளையும் பல்வேறு தலையீடுகளையும் கடைசியாக பல நெருக்கடிகளையும் தந்தே இருகின்றது இந்திரா அம்மையாரின் தெளிவான அரசியல் பார்வை ஈழ தேசத்தின் மேல் கரிசணையாக இருந்தது.இந்திய அரசியல் தலைவர்களிலும் குறிப்பாக இந்திரா அம்மையார் மீதும் ஈழத்தவர்கள் 80களில் கொண்டிருந்த பாசம் அளப்பரியது.அதே போலவே அண்னா திராவிட முன்னேற்ற கழக முன்னால் தலைவரும் முன்னால் முதல்வருமான மதிப்புக்குரிய மக்கள் திலகம் MGR அவர்களின் உதவிகளை நான் சொல்லியாகவேண்டும்.பல்வேறு சூழ் நிலையில் பல்வேறுபட்ட உதவிகள் நிதி உதவி அரசியல் உதவி ஆகியவற்றை புலிகள் இயக்கத்துக்கு வழங்கினார் அவர் அன்று பாய்சிய பசளையாலேயே ஈழாப்போராட்டம் என்ற ஆலமரம் வளர்ந்து நிற்கின்றது என்பது வெளிப்படை.மக்கள் திலகத்தை ஈழமக்கள் என்னும் இனம் உலகில் இருந்து மறையும் வரை ஈழ சமூகம் என்றுமே மறவாது


மதிப்புகுரிய இளங்கோவன் அவர்கள் சண்டாளர்கள் என புலிகள் இயக்கத்தை கூறி விமர்சித்திருகின்றார்.அது வேதனைய்யாகவே இரூகிறது.80களில் இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தபோது ஈழமக்கள் இந்திராவின் புதல்வரின் படைகள் வருகின்றன எம்மை நிச்சயம் காப்பாற்றுவார்கள் என நம்பினார்கள்.ஆனால் நடந்தது வேறு 8118 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்,3507 அபலைகள் கற்பழிக்கப்பட்டார்கள்,கிட்ட?்தட்ட 1 மில்லியெண் மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டார்கள் 4084 மக்கள் காணாமல் போனார்கள்[ஆதாரம் tchr.net] இழந்த உயிர்களையும் கற்பிழந்த எம் தாய்மார்கள் அக்காமார்களின் துன்பங்களுக்கு யார் காரணம் என சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே



எம் சமூகம் எறும்பினம்தானே அழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு அவர்களின் உயிர்களின் மதிப்பு குறைந்துவிட்டதாக நினைகிரீர்களா அக்ரோபர் 21ம் திகதி தீபாவளி தினம் 60 உயிர்கள் யாழ்வைத்தியசாலையில் நோயாளர்கள் வைத்தியர்கள் தாதிகள் என இந்திய இராணுவத்தால் பறிக்கப்பட்டனவே அது பயங்கரவாதம் இல்லையா,வல்வெட்டிதுறையில் உயிரோடு நிலத்தில் படுக்க வைத்து டாங்கிகளால் நசுக்கி கொல்லப்பட்டார்களே அது பயங்கரவாதம் இல்லையா?.கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த அப்பாவிமக்களை குறிபாத்து டாங்கிகளால் தாக்கி கொன்றார்களே அது பயங்கரவாதம் இல்லையா.இணுவிலில் தீபாவளி தினத்தன்று இராணுவத்துக்கு பயந்து கோயில்களில் தஞ்சமடைந்திருந்த மக்கள் வீட்டுகளில் விளக்கேற்ற சென்றபோது சுட்டு கொல்லப்பட்டு இணுவில் கந்தசுவாமி கோயிலுக்கு பின்னால் போட்டு எரித்தார்களே அது பயங்கரவாதமில்லையா

87ம் ஆண்டின் இறுதிப்பகுதி எமது கிராமத்தில் எமது வீட்டில் எமது தந்தையின் சகோதரர்கள் அம்மாவின் சகோதரர்கள் என பலர் கூடி இருந்தோம் கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகிய இந்திய அமைதிப்படையினர் அதற்கு பழிதீர்க்க எமது குடும்பத்தினரை வரிசையாக நிற்கவைத்து கொல்லுவதற்கு தயாராக நாய் ஒன்ரு அவர்களை பார்த்து குரைக்க நாய்க்கு வெடிவைக்கும்போது கேட்ட சத்ததில் வந்த ஒரு தமிழக கட்டளை அதிகாரியால் அன்று நாம் காப்பாற்றப்பட்டோம் இது நடக்கும் போது எனது வயது 4 .வைத்தியசாலைக்கு கர்பிணிகளை பிரவசத்துக்கு அனுமதிக்காத இந்திய இராணுவத்தின் கொடுஞ்செயலால் பல தாய்மார் குழந்தைகளை தமது கருவறையிலேயே பறி கொடுத்தனர் அத்யுமட்டுமல்ல இறந்த குழந்தையை அப்புறப்படுத்த முடியாமல் இரந்த குழந்தைகளை சுமந்தனர் அப்படியும் அப்புறப்படுத்த முடியாமல் பலர் இறந்தனர் அத்தகைய சம்பவம் எனது தாய்கும் நடந்திருந்தது 13 மதங்கள் கருவினை சுமந்தார்.

இவைகளை திரைப்படங்களில் தட்டி கேட்கும் கதாநாயகர்களை நாம் ஹீரோ அந்தஸ்து கொடுகின்றோம் ஆனால் நிஜம் என்னும் வரும்போது ஏன் அரசியல் தடுகின்றது என புரியவில்லை.ஏன் நாம் அழிக்கப்பட வேண்டியவர்களா அல்லது எமது உயிர்கள் என்ன அவ்வளவு மலினமானவையா.ராஜீவின் குடும்பத்துக்கு பாதுகாப்புக்கு என பலகோடிகள் ஒதுக்கப்பட்டன ஆனால் இந்தியப்படைகளால் கொல்லப்பட்ட கந்தையாவினதும் சுப்பையாவினதும் குடும்பம் சின்னாபின்னமானதை ஏன் சிந்திக்க மறுகின்றீர்கள்.நான் பழையதை கிளறும் நோக்கில் இதனை எழுதவில்லை காங்கிரஸ் கட்டியினரும் பாஜகா கட்சியினரும் ஜெயலலிதா அம்மையாரினதும் எதிர்ப்புகளை செய்து வருவதனால் ஏற்பட்ட ஆதங்கத்தாலே எழுதுகின்றேன்.தயவு செய்து எமது நிலையில் இருந்து சற்று யோசித்து பாருங்கள்.ராஜீவ் கொலை யாரால் செய்யப்பட்டது என எமக்கு தெரியாது ஆனால் ஈழத்தவரை 8118 உயிர்களை மறக்க எதிர்பார்கும் நீங்கள் ஒரு துன்பவியல் சம்பவத்தை வைத்து ஒட்டு மொத்த ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை எதிர்பது கவலையாக இருகின்ரது.



உங்கள் வரிப்பணத்தில் சாவை தழுவிய ஈழத்து பெண்மணி


இன்றைய நேரம் நாம் ஒன்று பட வேண்டிய நேரம் பலகோடி சகோதர சகோதரிகள் 38 மைலுக்கு அப்பால் இருப்பினும் அநாதைகளாகவே நாம் இருகின்றோம் இந்தியா வழங்கிய பல்குழல் ஏவுணை செலுத்தியும் பாக்கிஸ்தான் வழங்கிய பல்குழல் ஏவுகணை செலுத்தியும் அருகருகே வைக்கப்பட்டு தமிழ்மக்களின் உயிர்களை காவுகொள்ள்வதற்காக இலங்கை அரசு பயன்படுத்துகின்றது.இதில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒற்றுமையாக செய்யும் ஒரே வேலை ஈழத்தமிழனை அழிக்க ஆயுதம் வழங்குவது மட்டுமே என எண்ண தோன்றுகின்றது.ஒட்டுமொத்த மக்களும் கிளர்ந்து எழுந்தால் சிங்களம் அஞ்சும் நடுங்கும் எமக்கு தேவை இன்று உங்கள் மனதான ஆறுதலும் ஆதரவுமே ஈழ மக்கள் போராடுவோம் என்று எமது இலட்சியம் எட்டப்படும் வரை ஓயமாட்டோம் அதற்கு எமக்கு பக்கபலனாக உங்கள் ஆதரவை எமக்கு தருவீர்களா காயப்படும் விதமான வார்த்தைகளையும் தவிம்பீர்களா?? இதனை உங்களின் வீட்டில் ஒருவனாக உங்கள் சகோதரனாக உங்களிம் மகனாக தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்

அன்புடன்
மாறன்

மேலதிக விபரங்களுக்கு

சகோதரி தூயாவின் ஆக்கம் பார்க்க இங்கே கிளிக் செய்க


இந்தியபடையின் நம்பிக்கை எப்படி குலைந்தது என்ற சாத்திரியின் பதிவு


கருத்துபட உதவி-யாழ் இணைய உறவு rajcan

5 comments:

sathiri said...

நலல்லதொரு பதிவு தமிழகத்து உறவுகள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் சில அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள்தான் தங்கள் சுய நலத்திற்காகஉண்மையை ஒத்துக்கொள்ள மறுத்து ஈழத்தமிழர் பிரச்சனையில் குளிர் ககாய நினைக்கிறார்கள்.இவர்களிற்கு இந்திய மக்களை பற்றியோ ஏன் இந்திய தேசத்தை பற்றி கவலைகூட இல்லைதங்கள் சுயநலம் தான் முக்கியம்

Anonymous said...

உங்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கின்றோம். உங்கள் வெற்றிச் செய்திக்காக காத்திருக்கின்றோம்.
கசப்பான கடந்தகால நிகழ்வுகளை மறக்கும்படியும் மன்னிக்கும்படியும் நீங்கள் கேட்பதில் உள்ள நியாயத்தையும், தேவையையும் உணரமுடிகின்றது.

அதே நேரம் உங்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் இந்திய தரப்பு ரணங்களை மட்டும்
கிளறுவது எந்தவகையில் நியாயம்?

வைகோ குறித்து கடந்த வாரம் யாழ் உதயன் செய்தித்தாள் விமர்சித்ததில் நியாயம் ஏதாவது உண்டா?

பழைய ரணங்களை மீண்டும் கிளறவேண்டாம். எங்கள் அனைவருக்கும் ஈழவிடுதலை
விரைவில் வேண்டும். பொறுப்புடன் நடப்போம்.

புள்ளிராஜா

Anonymous said...

ராஜீவ் கொலையை அரசியல் வியாபாரமாக்கும் அரசியல் வாதிகளையும், அந்தக் கொலையை வைத்து தமிழர்களுக்கு மூக்கணாங் கயிறு போடும் உளவுத்துறையையும் அதன் தமிழர் விரோதப் போக்கையும் கண்டுகொள்வது அவசியம்.

இறக்கும்போது "பிரதமராக கூட" இல்லாத ராஜீவின் மரணத்தில் குளிர்காயும் அற்ப அரசியல்வாதிகளே, உளவுத்துறையே !!

பிரதமராக அயல்நாட்டுக்கு சென்றபோது "செருப்பால் அடிப்பதுபோல்" துப்பாக்கியால் அடித்து "கொலை முயற்சிக்கு" முயன்ற சிங்கள காட்டுமிராண்டிகளை அரவணைக்கிறாய்.

பிரதமராய் இருந்தபோதே தன் சீக்கிய இன மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா கொலையை குழிதோண்டிப் புதைத்துவிட்டாய்.

தேசபிதா காந்தியின் மரணத்தை கக்கத்துக்குள் அடக்கி அதை மூடி மறைத்தாய். இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, சாதாரண குடிமகனாக இருந்த ராஜீவ் கொலையை புழுக்கப் புழுக்க பிராண்டுகிறாய்? எதற்காக? யாருடைய ஏவலுக்காக?

கண்கண்ட சாட்சியாக, சிங்களவன் துப்பாக்கியால் அடித்து கொலை செய்ய முயன்றது உன் கண்ணுக்கு தெரியவில்லையா?

அதேகாலத்தில் இருந்த பயங்கரவாத சிங்கள அரசு தமிழ்நாட்டில் தன் ஏவல் நாய்களைக் கொண்டு குண்டுகள் வெடிக்க வைத்ததை ஏன் மறந்தாய்? ராஜீவை கொல்ல கண்முன்னே முயற்சி எடுத்தவர் யார்? சிங்கள காடையர் தானே?? அதையெல்லாம் விட்டுவிட்டு, அப்பாவி தமிழர்களுக்கு மூக்கணாங் கயிறு கட்ட நிற்பதன் வேடிக்கை என்ன?


என்னைப் பொறுத்தவரை, ராஜீவ் கொலை ஒரு உள்வீட்டுச் சதி. காலாகாலத்துக்கும் தமிழக உறவுகளை அடக்கி ஒடுக்க ஒரு ஆயுதமாக பாவிப்பதற்கே அதனை திட்டமிட்டு அரங்கேற்றினர்.

இந்தக் கொலையை இன்றிவரை தூக்கிப் பிடிப்பவர் யார்? அத்தனை பேரும் தமிழின விரோதிகளாக அடையாளங் காணப்பட்டவரே. இவர்கள்தான் இந்தக் கொலையின் சூத்திரதாரிகள் என்பதில் சந்தேகம் என்ன? இன்றிவரை இதை அங்குசமாக பாவிப்பதில் இருந்து புரியவில்லையா?

தமிழர்களின் எழுச்சியே அவர்களை பாதுகாக்கும். தமிழர்களின் அறிவே அவர்களை கரையேற்றும். தமிழர்களின் ஒற்றுமையே இந்த புல்லுருவிகளை காலில் போட்டு நசித்தொழிக்கும்.

வெல்க தமிழீழம். ஆண்டாண்டுகளுக்கும் ஆழ்க தமிழர்!!

Anonymous said...

தமிழ் மக்கள் எங்கு இருந்தாலும் உணர்வு ஒன்றுதான்...ரரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்... துயரம்தான்...அதற்க்காக இந்தியன் பாகிஸ்தானியுடன் இனைந்து தமிழீழ மக்களை கொல்ல ஆயுதம் வழ்ங்குதல்..சரியா?அதற்கு செலவிடும் நேரத்தை உழைப்பை புத்திசாலி தனத்தை காஷ்மீரில் இருநாடுகளும் செய்யலாம்... ஆனால் எங்கள் நாட்டின் சாபகேடே.. அரசியல்வாதிகள்தான்..அவர்கள் புகைபடம் மற்றும் செய்திகள் பத்திரிக்கையில் வரவேண்டும் என்பதற்க்காகவே சாலைகளை கூட்டி பெரூக்குவர்...சுயலாபம்..சுயநலம்.... இன்னும் என்ன சொல்ல...எத்தனையோ சோதனைகளை கண்ட தமிழீழம்..மலரதான் போகிறது.. என்றும் எங்கள் உள்ளார்ந்த ஆதரவோடு... வாழ்க தமிழ் வெல்க தமிழனம்..

Anonymous said...

இன்றைய தமிழ் மக்கள் , தமிழ் இளைஞர்கள் தமிழ் உணர்வோடு தான் இருக்கிறார்கள்.
ஈழத்து சகோதரர்களே காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டின் பீடை அம்மையார் சொற்களை பொருட்படுத்த வேண்டாம். தமிழக முதல்வர் தன் பதவியை காப்பதவும், தன் மகனுக்கு பதவி கிடைக்கவும் காங்கிரஸ் அல்லது பா ஜ க துதி பாடி கொண்டு தான் இருப்பார்.
இந்திய இராணுவம் செய்த கொடுமைகளுக்காக இந்தியா வின் சார்பில் மன்னிப்பு கேட்டுகொள்கிறோம்.
அது மன்னிக்க முடியாத குற்றம் தான். இருந்தாலும் "மறப்போம் மன்னிப்போம் ".
இனி நடக்க வேண்டியதை பார்போம்......கண்டிப்பாக சீகரமே ஈழம் மலர்வதை பார்போம்