Sunday, July 15, 2007

தமிழீழ விடுதலை போராட்டதினதும் இந்திய சுதந்திரபோராட்டத்தினதும் ஒற்றுமை வேற்றுமைகள் பகுதி-1



விடுதலை போராட்டம் என்பது ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்கி ஆள முனையும் போது உருவாகின்றது அந்த வழியிலேயே இந்திய விடுதலை போராட்டம் அங்கிலேயர்களால் அடக்கி அரசாள முனையும் போதே உருவானது இந்திய போராட்டத்தை இரு வகைப்படுத்தலாம் ஒன்று அகிம்சை போராட்டம் மற்றயது நேதாஜியின் ஆயுத போராட்டம்.இதே போன்றதே தமிழீழ போராட்டமும் தமிழீழ மக்களை அடக்கி அடிமைகளாக நடத்த முனைந்த போதே தமிழீழ இளைஞர்கள் வீறுகொண்டெழுந்தனர்.ஆயுதம் ஏந்தினர் என்பது உங்களுக்கு தெரியும்.அகிம்சை வழியில் தந்தை செல்வா போன்றோர் எமது உரிமையை பெற முனைந்தனர் ஆனால் அவருக்கும் அவரை பின்பற்றியவர்களுக்கும் கிடைத்ததோ அடியும் உதையும் அவமானமும்தான்.ஒப்பந்தங்கள் போடப்பட்டன ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காயமுன்னரே அவை கிழித்தெறியப்பட்டன.தந்தை செல்வா இறக்கும் தருணத்தில் சொன்னாராம் எந்த நேரமும் தமிழர் என்னை போல உரிமையை கேட்டு கொண்டிருக்க மாட்டார்கள் இன்னும் சிறிது காலத்தில் அவர்களே உரிமையை எடுத்து கொள்வார்கள் என அவர் சொன்னது முற்றிலும் உண்மையானது அவர் இறந்த சில நாட்களில் விடுதலை போராட்டம் முனைப்பு பெற தொடங்கி விட்டது.

தமிழீழ விடுதலை போராட்டத்தை எத்தனையோ இயக்கங்கள் தொடங்கினாலும் இன்றுவரை உறுதி குலையாமல் தமிழீழ தாயக இலட்சியத்தை மனதில் கொண்டு கைதுப்பாக்கியோடு ஆரம்பித்த அன்றைய போராட்டம் இன்று முப்படைகளையும் கொண்ட ஒரு ஆலமரமாக தமிழனின் தனிப்பெருமை வாய்ந்த ஒரு இராணுவமாக வளர்ந்து போராட்டத்தை வீறு நடை போட்டு கொண்டிருகின்றது.எத்தனையோ தலைவர்கள் விலை போனார்கள் ஆனால் எப்பொழுதும் விலைபோகாத தலைவராக தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவரும் தமிழீழ தேசியத்தலைவருமான மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் விளங்குகின்றார் என்றால் மிகையில்லை.

இந்திய தேசத்துக்கு நேதாஜி போன்று தமிழீழ தேசத்துக்கு பிரபாகரன் என்று சொல்லலாம்.நேதாஜி சந்திரபோஸ் அவர்கள் அரசியலை முதலில் கைகொண்டவர் 1940ம் ஆண்டு சிறையில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டு விடுதலை பெற்று இந்திய தேசத்தின் விடுதலையை வன்முறை கொண்டே விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஆப்கானிஸ்தான் சென்று அங்கிருந்து சேவியத் ஒன்றியம்,இத்தாலி,ஜேர்மனி,ஜப்பான் ஆகிய நாடுகளை தொடர்பு கொண்டு அந்தந்த நாடுகளுக்கு விஜயம் செய்து ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு அவற்றின் உதவியை பெற்று அன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாசித்த 30 லட்சம் இந்தியர்களை திரட்டி இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து இந்திய தேசத்தை நேசித்த ஒரு அற்புதமான தேச பக்தர்.ஆனால் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்திரா அம்மையாரின் இலங்கையின் அமைதி இன்மையை ஏற்படுத்தும் எண்னத்துடன் பல்வேறு இயக்கங்களை உருவாக்கி பகமை பாராட்ட வைத்து தன்நாட்டு சுயநலனுக்காக ஈழத்தமிழரை பகடைகாய்களாக பாவிக்கும் சதிவலையில் இருந்தி சிக்காமல் துரநோக்கு சிந்தனையுடன் புலம் பெயர் தமிழீழ மக்களை ஒன்று திரட்டி தமிழீழ போராட்டத்துக்கு வித்திட்டு எந்த நாட்டையும் நம்பி இராமல் எந்த நாட்டின் படையுதவி இல்லாமல் விடுதலை போராட்டத்தை கொண்டு செல்லும் ஒரு வீரர் ஒரு உண்மையான தேச பக்தர்.


தொடரும்

No comments: