Monday, July 16, 2007

தமிழீழ விடுதலை போராட்டதினதும் இந்திய சுதந்திரபோராட்டத்தினதும் ஒற்றுமை வேற்றுமைகள் பகுதி-3

படை வீரர்களின் உறுதி

நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்த வீரர்கள் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் சென்ற தேச பக்தர்களும் ஜேர்மனிய இத்தாலின் யுத்த கைதிகளும் பிரிட்டீஸ் இராணுவத்தில் பணியாற்றி சோர்வடைந்து இந்திய தேசத்தின் மேல் கொண்ட காதலால் சுதந்திர வீரர்களாக மாறிய உன்னத வீரர்களும்தான்.உதாரணமாக சொல்லப்போனால் தாய்லாந்தில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேய படையணியில் பணியாற்றிய ஜெனாரல் மோகன் சிங் ஆங்கிலேய படையிலிருந்து விலகி இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தமையை சொல்லலாம்.



தமிழீழத்தை பொறுத்த வரை ஈழத்தில் நடந்த கொடுமைகளை கண்ணுற்ற இளைஞர்கள் போராட்டத்தில் இணைந்தனர் அத்துடன் புலம் பெயர்ந்த தமிழீழ இளைஞர்களும் போராட்டத்தில் இணைந்தனர்.உதாரணமாக சொல்ல வேண்ட்டுமாயின் கேணல் சங்கர் மற்றும் வீரவேங்கை பகீன் போன்ற சுதந்திர தாகமுடைய இளைஞர்களும் நேரடியாக போராட்டத்தில் பங்கு கொள்ள இணைந்தனர்


உறுதி என்னும் வரும் பொழுது ஆக்கிரமிப்பு படையினருக்கு இருக்கும் உறுதி ஒரு விடுதலை போராளிக்கு இருக்கும் உறுதியை விட சொற்பமானது அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழும் ஒரு வீரன் தனது உயிரினை மதிக்காது தன் போராட்டத்தில் வெல்வதிலேயே குறியாக இருப்பான்.இந்திய தேசிய விடுதலை இராணுவத்தின் 1944 மேமாத இறுதியில் மேற்கொண்ட பலேல் விமானதளத்தின் மேலான தாக்குதலானது உணவு இல்லாமல் சொற்ப ஆயுதங்களுடன் ஜப்பானிய இராணுவம் இரவில் தாக்குவோம் என சொல்லியும் கேட்காமல் முழுக்க முழுக்க இந்திய தேசிய இராணுவத்தின் முயற்சியால் கைபற்றபட்டது.அங்கு ஏராளமான ஆயுதங்களும் உணவு பொருள்களும் மீட்கப்பட்டன இவற்றை INA வீரர்கள் சொல்லுவார்களாம் சேர்சிலின் பரிசு என.இதேபோல் 20 வீரர்கள் காவல் காத்த ஒரு காவல் நிலையத்தை 3 முறை தாக்குதலை தொடுத்து 150 சிப்பாய்களை பலி கொடுத்தது ஆங்கிலேய அரசு ஒரே ஒரு INA வீரர் பலியாக எண்ணிலடங்காத ஆயுதங்களையும் உணவு பொருட்களையும் INA இடம் கையளித்து அவமானப்பட்டது ஆங்கிலேய அரசு


இதேபோலத்தான் தமிழீழ விடுதலை புலிகளும் விடா முயற்சி சாதனைகாக தம்முயிரை துறக்க தயங்காத பண்பு ஒரு விடுதலை போராட்ட போராளிகளுக்கு இலக்கணமாக அமைந்தது.உதாரணமாக சொல்லப்போனால் யாழ் கோட்டைதாக்குதல்.யாழ் கைபற்றியதாக மார்தட்டிய பின்னர் நடத்திய முல்லைதீவு படை நடவடிக்கை இவ் நடவடிகை மூலம் ஏராளமான ஆயுதங்களை அள்ளி குவித்தனர் புலிகள்.அது மட்டுமல்ல புலிகள் அழிந்து விட்டனர் 5% உள்ளனர் என மார்தட்டிய நவீன சப்புமல் குமாரவாக தன்னை தானே கூறிகொண்ட ரத்வத்தை மல்லாவியை சுற்றிய மிகசிறிய பகுதியில் நிலைகொண்டிருந்த புலிபடைகள் நவீன ஆயுதங்களுடன் கூடிய ஒரு ஆக்கிரமிப்பு படையை மனவுறுதி கொண்டு திணறடித்தனர் இந்த புலிப்பாச்சல் ஆணையிறவையும் தாண்டி கைதடி வரையும் தென் முனையில் வவுனியா நகரத்துக்கு அண்மை வரை சென்றது ஆனால் அன்றைய அரசியல் சூழ் நிலைகாரணமாக நடவடிகைகள் கைவிடப்பட்டு முகமாலை வரை புலிகள் பின்னகர்ந்தனர்.அங்குலம் அங்குலமாக இலங்கை அரசு பிடித்த நிலத்தை சொற்பகாலத்தில் எதிரிக்கு அதீத உயிர் இழப்பை ஏற்படுத்தி ஆயுதங்களை கைபற்றி கொண்டதற்கு[இது சிறீலங்காவினது தமிழீழ படைகளுக்கான அன்பளிப்பு] மனவுறுதியே காரணம்.


இராணுவ சமநிலையை சொற்ப அனுபவமில்லாத வீரர்களை கொண்டு தம் பக்கம் திருபினர் INA உம் LTTE ம் இதற்கு காரணம் தம் மண்ணை விடுவிக்க வேண்டும் என்ற மனவுறுதியே!!

தொடரும்......

2 comments:

Anonymous said...

நல்ல முயற்சி நண்பரே. தொடர்ந்து ஆக்கங்களை எழுதுங்கள்.

மாறன்(maran) said...

உங்கள் கருத்துக்கு நன்றிகள்