Sunday, July 15, 2007

தமிழீழ விடுதலை போராட்டதினதும் இந்திய சுதந்திரபோராட்டத்தினதும் ஒற்றுமை வேற்றுமைகள் பகுதி-2



நேதாஜி அவர்களுக்கு இருந்த பின்பலம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை இதுவே இரு போராட்டங்களினதும் முக்கிய வேற்றுமை சொல்களில் மட்டுமல்ல செயலிலும் தளம் அமைத்து செயற்படுவதற்கும் நேதாஜி அவர்களுக்கு பல நாடுகளும் அரசியல் தலைவர்களும் உதவி புரிந்தனர் ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு அப்படிபட்ட எந்த பின் தள உதவிகளும் கிடைகவில்லை என்பது நிதர்சனம் தானாகவே போராட்ட கலைகளை கற்று ஒவ்வொரு நுணுக்கங்களையும் இராணுவ அரசியல் திட்டமிடல்களை 16 வய்திலிருந்தே கற்று இன்று இராணுவ அரசியல் உலகில் நீண்ட நாள் நிலைத்திருக்கும் ஒரு அனுபவம் வாய்ந்த ஒரு மனிதராக உருவெடுத்துவிட்டார் பிரபாகரன் அவர்கள்.

நேதாஜி அவர்கள் இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கியமாக கருதியது பிரச்சாரம் அதன் காரணமாகவே ஆஸாத் ஹிந்த் என்னும் வானொலியை நிறுவினார் இத்தாலி ஜேர்மனியின் உதவியுடன் இந்தியாவில் ஒலிபரப்பினார் இதே போன்ற ஒரு நடைமுறையையே பிரபாகரன் அவர்களும் கையாண்டார் அதன் செயல்வடிவமே புலிகளின் குரல் வானொலியும் அன்றைய நிதர்சனம் தொலைகாட்சியும் இன்றைய தமிழீழ தேசிய தொலைகாட்சியும் மற்றும் விடுதலை புலிகள் ஏடும்.இவற்றின் ஊடாக பிரச்சாரத்தினை மேற்கொண்டு தமிழீழ போராட்டத்தின் நியாயத்தன்மையையும் அவசியத்தையும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமல்ல தமிழீழ தமிழர்களுக்கும் ஒரு விழிபுணர்சியை உண்டாக்கி தமிழீழ போராட்டத்தின் அவசியத்தை உணரச்செய்தது என்றால் மிகையில்லை.

அன்றைய ஜப்பானிய பிரதமர் டோஜோ அவர்களின் முன்னிலையில் ஒரு ஜப்பானிய இராணுவ அதிகாரி சொன்னாராம் அரசியல் தலைவர்களுக்கு இருக்கும் பலவீனங்களான பணம்,பெண்,மது,புகை எந்த ஆசாபாசங்களுக்கும் இடங்கொடுக்காத ஒரு உன்னத தேசபக்தர் நேதாஜி என அதே இயல்புகளை கொண்ட ஒரு வீரரே பிரபாகரன் அவர்களும் இவர்கள் இருவரினதும் இயல்புகளும் உணர்வுகளும் அநேகமானவை ஒரே மாதிரியானவை தேசத்தின் மீதும் தேசமக்களின் மீது அளப்பரிய அன்பு கொண்டவர்கள் மட்டுமல்ல தம் காந்த சக்தியினால் மக்கலை அணிதிரட்டி அந்நிய சக்திக்கு எதிராக போராடியவர்கள் போராடி கொண்டிருப்பவர்கள் ஆகவே இவர்கள் இருவரையும் ஒப்பிட்டதில் எந்த தவறும் இல்லை.


தொடரும்...

No comments: